Home இலங்கைச் செய்திகள்எல்நினோ எதிரொலி: இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அபாயம்? – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

எல்நினோ எதிரொலி: இலங்கையில் மீண்டும் மின்வெட்டு அபாயம்? – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

by Mohamed Siraj
0 comments

எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடப்படுவது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

banner

You may also like

Leave a Comment