News
இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார்

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஷாருக்கான் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இது உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக 2004 ஆம் ஆண்டு ஷாருக்கான் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.