Sri Lanka News
போக்குவரத்து தொடர்பாக பயணிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் முறை

பொதுப் போக்குவரத்து தொடர்பாக பயணிகளின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும். பாதுகாப்பான போக்குவரத்திற்கான திட்டத்தின் கீழ் இதனை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக்க தெரிவித்தார்.
கருத்துக்கள், முறைப்பாடுகள், யோசனைகள் போன்றவற்றை முன்வைக்கும் முறை ஒன்று இதற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் போக்குவரத்து சபையின் வாகன சேவையை பயன்படுத்தும் பயணிகளின் தகவல்கள் இதற்கு பெற்றுக்கொள்ளப்படுவதாக நிறைவேற்று அதிகாரி மகேஷ் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு தமது கருத்துக்கள் யோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை வழங்க முடியுமான வழிகள்;
WhatsApp:- 0704775030
உடனடி அழைப்பு:- 1958
இணைத்தளம்:- www.sltb.lk
