World News
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில்..

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் மற்றும் அவரது 60 வயதான தோழி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த இவ் விமானம் வீதியில் விழுந்ததால் அங்கு பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் தீ சில வாகனங்களையும் தீக்கரையாக்கியுள்ள நிலையில் இரு சாரதிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.