Sri Lanka News

EPF பயனாளிகளுக்கு அவசர அறிவிப்பு!

இலங்கை தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஊழியர் சேமலாப நிதி பிரிவின் சேவைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இனிவரும் அனைத்து புதன்கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், EPF என்ற ஊழியர் சேமலாப சேவைகளைப் பெறத் திட்டமிட்டிருந்த உறுப்பினர்களுக்கான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, புதன்கிழமைகளில் முன்பதிவு செய்திருந்த உறுப்பினர்கள், காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அடுத்த நான்கு வேலை நாட்களுக்குள் (வியாழன், வெள்ளி, திங்கள் அல்லது செவ்வாய்) தங்கள் வருகையை மீளமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவை நடவடிக்கைகளை மேம்படுத்தவும், புதிய விடுமுறை அட்டவணைக்கு ஏற்ப செயற்பாடுகளைச் சீரமைக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button