Home செய்திகள்பங்களாதேஷ் மகுறாவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷ் மகுறாவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!

by Nabishad
0 comments

-Azim Hussain Bangladesh Reporter-

மகுரா–ஜினைதஹ் சாலையில் உள்ள அபால்பூர் பள்ளிப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்:
முஃப்தி நைமுர் இஸ்லாம் ரப்பி (21)
ஆஷிகுர் ரஹ்மான் ரிப்பன் (45)
ப்ரிஷ்டி அக்தர்
வியாழக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதலில் ரப்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரிப்பன் மற்றும் அவரது மகள் ப்ரிஷ்டி அக்தர் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

banner

ப்ரிஷ்டி அக்தருடன் இருந்த குழந்தை நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment