98 பாடசாலைகளில் ஒரு மாணவன்கூட இல்லை; 50 மாணவர்களுக்கு குறைவான 1506 பாடசாலைகள்!

20 மாணவர்களுக்கு குறைவான 406 பாடசாலைகளும் 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றுக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி தனது விசேட உரையில் இதனை தெரிவித்தார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் 406 உள்ளன.
30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகளும் உள்ளன.அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141, 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.