AccidentWorld News

குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற பயணிகள் விமானம் விபத்து; நூற்றுக்கணக்கானோர் பலி? முன்னாள் முதல்வரின் நிலை என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1.10 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் போடிங் பாஸ்(Boarding Pass) சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button