NewsSportsSri Lanka News
கிரிக்கெட் நடுவர்களுக்கான கருத்தரங்கு
✍️மஜீட். ARM
இன்று (அக்டோபர் 26, 2025) ADCA நடுவர்களுக்கான கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.
கிரிக்கெட் விளையாட்டின் தரத்தையும், நடுவர்களின் திறமையையும் மேம்படுத்தும் நோக்குடன், அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (ADCA – Ampara District Cricket Association) ஏற்பாடு செய்திருந்த நடுவர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
சகல நடுவர்களும் குறித்த நேரத்தில் ADCA அலுவலகம், அம்பாறையில் ஒன்றுகூடி பயிற்சி மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த விரிவான அறிவைப் பெற்றனர்.
இந்தக் கருத்தரங்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள நடுவர்களுக்குப் பெரும் பயன் அளித்ததுடன், வரவிருக்கும் போட்டிகளுக்கு அவர்களைத் தயார்படுத்த உதவியது.





