ஏபிடி வில்லியர்ஸின் அதிரடியால் கிண்ணத்தை வென்றது தென்னாப்பிரிக்கா

உலக செம்பியன்ஷிப் ஒப் லெஜண்ட்ஸ் (World Championship of Legends) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா செம்பியன்ஸ் அணி கிண்ணத்தை வென்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் செம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க செம்பியன்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் செம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 196 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க செம்பியன்ஸ் அணி 16.5 ஓவர்கள் நிறைவில், 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் ஏபிடி வில்லியர்ஸ் 120 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் உலக செம்பியன்ஷிப் ஒப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடருக்கான கிண்ணத்தை தென்னாப்பிரிக்க செம்பியன்ஸ் அணி சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது