94
கிளிநொச்சி A9 பிரதான வீதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாரவூர்தியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

