Home இலங்கைச் செய்திகள்பலாலி வீதியில் இராணுவ முகாம் முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் காயம்!

பலாலி வீதியில் இராணுவ முகாம் முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து – இருவர் காயம்!

by Nabishad
0 comments

அச்சுவேலி–பலாலி வீதியின் ஒட்டகப்புலம் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒட்டகப்புலம் பகுதியில் அமைந்துள்ள 511 படையணியின் இராணுவ முகாமுக்கு முன்பாக இருந்த பூந்தொட்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

banner

You may also like

Leave a Comment