Sri Lanka News
அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்கில்!

70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று (27) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.