Sri Lanka News
முன்னாள் அமைச்சர் கெஹலிய மற்றும் ரமித் பிணையில் விடுதலை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அரசாங்கத்திற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.