தீவிரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது – ஜெய்சங்கர் எச்சரிக்கை

தீவிரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் பயணமாகச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறையமைச்சர் ஐ.நா. தலைமையகத்தில் ‘பயங்கரவாதத்தின் மனித விலை’ என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்
இதுதொடர்பாக அவர் கூறுகையில்
தீவிரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது.தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது.
தேவைப்பட்டால் இந்தியா மீண்டும் தாக்கும். தீவிரவாதிகளுக்கு தண்டனை விலக்கு அளிக்கப்படாது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.
அவர்களை இனிமேல் பிரதிநிதிகளாகக் கையாள மாட்டோம். அவர்களுக்கு ஆதரவளிக்கும், நிதியளிக்கும், பல வழிகளில் ஊக்குவிக்கும் அரசாங்கத்தையும் விட்டுவிட மாட்டோம். இவ்வாறு கூறினார்.