குவைத்தில் இன்றைய இரவு அனைவரும் வீட்டிலேயே இருங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது உள்துறை அமைச்சகம்:

குவைத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் நாட்டிற்க்கு எதிரான தாக்குதலை
தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் ஏப்ரல் 8, புதன்கிழமை காலை 6:00 மணி வரை, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, குடிமக்களும் குடியிருப்பாளர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து, வீட்டிலேயே இருக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் நேரத்தில் அனைவரும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.




