இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,676.4 ஆகவும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72.99 டொலராகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் டொலரின் பெறுமதி மாற்றங்களுக்கு அமைய, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இவ்வாறான தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




