Sri Lanka News

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் உத்தியோகத்தர்களின் பணிசுமை அதிகரிப்பு!

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் உலக வாய் சுகாதார தின வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, வியாழக்கிழமை (02) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு பயிற்சி மத்திய நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,அண்மைகாலமாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சிறை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் சிறை அதிகாரிகளின் வேலைப்பளுவும் பலமடங்காக அதிகரித்துள்ளது.

அத்தோடு தொற்றாநோய்களும் இந்நாட்டின் சுகாதார துறையில் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் பதிவாகும் மரணங்களுக்கு 80 சதவீதம் தொற்றா நோய்களே பிரதான காணமாக உள்ளன.

இவ்வாறு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

முறையான கணக்கெடுப்பு இல்லாவிடினும், கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தமும், 30 – 33 சதவீதமானோருக்கு நீரிழிவு நோயும் உள்ளதாக தெரியவந்துள்ளது.அத்துடன் நாளாந்தம் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

தற்போது சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் சுமார் 6 ஆயிரம் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதுடன், 36 சிறைச்சாலைகளில் சுமார் 33,500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டே சுகாதார அமைச்சு இத்தகைய திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button