Sri Lanka News

வெதுப்பக உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம்

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று(23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், வெதுப்பக தொழில்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஆராய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாண் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்திப் பொருட்களினதும் திருத்தப்பட்ட புதிய விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button