News
நடப்பாண்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்

நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக 6512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் 1198 நிதி மோசடி தொடர்பாக பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறியுள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவை போலியான பேஸ்புக் கணக்குகள், பாலியல் துன்புறுத்தல், அவமதிப்பு மற்றும் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்தல் மூலம் செய்யப்பட்ட சம்பவங்கள் என்றும் கூறப்படுகிறது.




