Home இலங்கைச் செய்திகள்பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெற்றிகரமாக நிறைவு

by Mohamed Siraj
0 comments

(எஸ்.எம்.அறூஸ்)

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏ. ஆர் மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ. எல். ஸாஜித் ஹுஸைன் பாகவி அவர்களின் தலைமையிலும், கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ. எல். மௌஜுத் பாகவி, கல்லூரியின் நிருவாக சபைத் தலைவர் ஏ. ஆதம்பாவா ஆகியோர்களின் முன்னிலையிலும் வெகு விமர்சையாக இடம் பெற்றது.

banner

விழாவின் பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ.எம் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அக்கரைப்பற்று மேயருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களை எம்.எஸ்.உதுமாலெப்பை, அஸ்ரப் தாஹிர், எம்.எஸ்.அப்துல் வாசித், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் உலமாக்கல்,துறைசார் கல்வியியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 67 ஆலிம்களும் 22 ஹாபிழ்களும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முதல் நிலை மாணவர்களுக்கான தங்கப் பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஐ.எம் றிஸ்வி முப்தி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

You may also like

Leave a Comment