16
(றாசிக் நபாயிஸ், மருதமுனை செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி வந்த
அப்துல் கரீம் அப்துல் வாஹிர்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கொழும்பு தலைமைக் காரியாலய அவசர நடவடிக்கை நிலையத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்,
மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட முன்னிலையில்
தனது கடமையை இன்று (20)
பொறுப்பேற்றார்.ண
20 வருட கால அரச துறையில் பணியாற்றி வரும் இவர் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகங்களில் அனர்த்த முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி வந்த
நிலையில் இப்பதவியில்
நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
