Accident

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கண்டனர்; சாரதியின் தூக்கக் கலக்கத்தால் விபரீதம்

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை கண்டனர் மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த கண்டனர், அதிகாலை 5.00 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது.

விபத்து நேரத்தில் சாரதி ஒருவரே கண்டனரில் இருந்ததாகவும், தூக்கையின்மை காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது,

விபத்தின்விளைவாக ஸ்ரீலங்கா டெலிக்கொம் இணையத் தொலைத்தொடர்பு வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button