Sri Lanka News

காலியில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் சிதைவுகள்; மீன்களும் இறப்பதாக தகவல்

காலி கடற்கரையில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய கப்பலின் பல சிதைவுகள் இன்று ஹிக்கடுவ முதல் சீனிகம வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.

கடற்கரை முழுவதும் டீசல் கறைகள் காணப்படுவதாகவும், மீன்களும் இறந்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இந்த கடற்கரைக்கு வருவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உரிய அதிகாரிகள் இந்த விடயத்தை விரைவில் ஆராய்ந்து ஒரு தீர்வை வழங்குமாறு அப்பகுதியினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button