Sri Lanka News

அரச சேவையில் இணைய வாய்ப்பு – 15,839 வெற்றிடங்களை நிரப்ப அனுமதி!

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, பொதுச் சேவையின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

அதிகப்படியான ஆட்சேர்ப்புக்கள் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களில் இடம்பெறவுள்ளன.

முக்கிய அமைச்சுக்களின் விபரங்கள் வருமாறு:பாதுகாப்பு அமைச்சு: 9,794, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு: 1,915, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு: 776, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு: 339, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு: 300, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் அபிவிருத்தி அமைச்சு: 214,, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு: 67மாகாண சபைகளிலும் கணிசமான அளவில் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன:

வட மாகாண சபை: 411, வடமேல் மாகாண சபை: 401, கிழக்கு மாகாண சபை: 282, சபரகமுவ மாகாண சபை: 236, ஊவா மாகாண சபை: 146இந்தப் பாரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது பொதுச் சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதுடன், அரச நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button