சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (29) சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் (PC), கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அம்பாறை மாவட்ட பிரதான கணக்காளர் ஏ.எல்.மஹ்ரூப், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



