Sri Lanka News
சுதந்திர தின ஒத்திகை – நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.
78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



