இலங்கையில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
தற்பொழுது தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளமையே இந்த உள்ளூர் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.




