NewsSri Lanka News

பிரதமர் ஹரிணியுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

25 நவம்பர் 2025 இலங்கை க்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் அமைதிப்படையின் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா தலைமையிலான Fulbright சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் விடயங்களை முன்வைத்தார்.

எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்காக கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஹரிணி இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button