News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெயரில் பண மோசடி – ஒருவர் கைது

சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பண மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனுடன் தொடர்பாக, சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 76 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஒருவரை விசேட விசாரணைப் பிரிவினர் நேற்று (30) கைது செய்துள்ளனர்.
அவருக்கு எதிராக கம்பஹா நீதிமன்றத்தில் ஏழு நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சந்தேகநபர் இன்று (31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




