Sri Lanka News

கெப்பிட்டி பொல அரச பேருந்து புகை கக்கி செல்வதால் சுற்றுச்சூழல் மாசடையும் நிலை!

ஹட்டனில் இருந்து கெப்பிட்டி பொல நோக்கி பயணிக்கும் WP.4673 இலக்கம் கொண்ட கெப்பிட்டி பொல அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து நாளாந்தம் பாரிய அளவில் புகையை கக்கி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுடைந்து வருவதுடன் மனிதர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்கள் இந்த புகையை சுவாசிப்பதால் மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அரச பேருந்தை பாவனையில் இருந்து இடைநீக்கம் செய்து மக்கள் நலன் பேணுவதுடன் முறையாக செப்பனிட்ட பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button