நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு அவசர சேவை வாகனம் கையளிப்பு

எமது நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் (NJWA) நீண்ட காலக் கனவாக இருந்த அவசர சேவை வாகனம் (Ambulance), இன்று நிந்தவூர் மக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக பல ஆண்டுகள் தாமதமான போதிலும், “மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டும்” என்ற உயரிய நோக்கத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நல் உள்ளங்களின் தாராளமான நிதியுதவியால் இந்த மகத்தான முயற்சி இன்று நனவாகியுள்ளது.
நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஜனாப் A.M. அப்துல் லத்தீப் அவர்கள் முன்னிலையில், அமைப்பின் தலைவர் ஜனாப் M.I.M. றியாஸ் (ஆசிரியர்) தலைமையில் இந்த அவசர சேவை வாகனம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த மனிதாபிமானப் பணிக்கு துணை நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் அமைப்பு சார்பாக இதயங்கனிந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.
அல்லாஹ் உங்கள் செல்வத்திலும் வாழ்விலும் மென்மேலும் பரக்கத் செய்து, இவ்வுலகிலும் மறுமையிலும் உயரிய நற்கூலிகளை வழங்குவானாக! ஆமீன்.
📞 HOT LINE: 076 998 8895
நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பு (NJWA)








