உலகக் கோப்பை தகுதி பெற்ற வீரர்களை வாழ்த்திய கத்தார் அரசர்!

2026 பிபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற கத்தார் தேசிய கால்பந்து அணியினரை கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, லுசைல் அரண்மனையில் சந்தித்து வாழ்த்தினார்.
2022ஆம் ஆண்டில் நடத்திய உலகக் கோப்பை போட்டியில் நிகழ்ச்சி நடத்துநர் நாடு என்ற வகையில் பங்கேற்றிருந்த கத்தார் அணி, இம்முறை தகுதி அடிப்படையில் வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்த சிறப்பான வெற்றியை முன்னிட்டு, வீரர்களின் சிறந்த ஆட்டத்தையும் சாதனையையும் அரசர் பாராட்டி, எதிர்காலப் போட்டிகளிலும் கத்தாரை மேலும் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென வீரர்களுக்கு ஊக்கமளித்தார்.
இச் சந்திப்பில் துணை அமீர் ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல் தானி, அமீரின் தனிப்பட்ட பிரதிநிதி ஷேக் ஜாசிம் பின் ஹமத் அல் தானி, அமைச்சர்கள் மற்றும் கத்தார் கால்பந்து சங்கத் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




