News
இன்று முதல் தொடரும் கனமழை; 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதுளை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் பலத்த சேதங்கள் எற்பட்டு வருகின்றன. அத்துடன் இன்று வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது.
தாழமுக்கத்தால் வடக்கு – கிழக்கில் இன்று முதல் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனத்த மழையின் எதிரொலியால் குறித்த மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




