நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற மானம்பூ உற்சவம் – காணக்குவிந்த பக்தர்கள்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.
காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று, குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானின் அருட்காட்சியை கண்டு களித்தனர்.
இதேவேளை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டபபூசை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து விநாயக பெருமான் குதிரை வாகனத்தில் வெளிவீதி எழுந்தருளி மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் மானம்பூ உற்சவத்தில் விநாயக அடியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மானம்பூ உற்சவத்தை கண்டுகளித்தனர்.






