News
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பணியிடை நீக்கம்!

நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 23ஆம் திகதி முதல் இந்த இடைக்காலத் தடை நடைமுறைக்கு வந்துள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சில சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமிந்த குலரத்ன கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாளர் தொகுதி பிரதானி ஆகிய பதவிகளைப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.




