News

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (28) நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது, யோஷித சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, தடயவியல் கணக்காய்வு அறிக்கை மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் அடங்கிய 26 இறுவெட்டுகள், 8 USB, வன்தட்டு, மடிக்கணினி மற்றும் CPU ஆகியவற்றை ஆய்வு செய்ய அனுமதி கோரினார். அரச தரப்பு இதற்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தது.

இந்த வழக்கு சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button