ஐபிஎல் 2026 – தீவிர பயிற்சியில் எம் எஸ் தோனி

இந்திய அணியின் முன்னாள் அணி தலைவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அவர் இரண்டு முறை அணி தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் அணி தலைவர் பதவிக்கு திரும்ப வேண்டியிருந்தது.
தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் அணி தலைவராக உள்ளார். மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
தோனி பிறகு அணியின் கீப்பராக சஞ்சு செயல்படுவார் என சொல்லப்படுகிறது. எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்நிலையில் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்காக பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார்.




