Sports

இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஷார்ட், லான்ஸ் மோரிஸ் ஆகியோர் காயம் காரணமாக, மிட்செல் ஓவன் கன்கஷன் காரணமாகவும் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனையடுத்து ஆரோன் ஹார்டி மற்றும் மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் சேர்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சானியா சந்தோக்கிற்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஐபிஎல் தொடரின் 16அவது சீசனுக்கான பேச்சுகள் அதிகரித்து வரும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, சென்னை சூப்பர் கிங்ஸின் மூன்று பெரிய வீரர்களில் ஒருவருக்கு ஈடாக அவரை டிரேடிங் செய்ய ராஜஸ்தான் அணி நிர்வாகம் முன் வந்துள்ளதாகவும், ஆனால் அதற்கு சிஎஸ்கே அணி மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், வீரர்கள் தங்களின் சொந்த சாதனைகளுக்காக விளையாடாமல், நாட்டிற்காக போட்டிகளில் வெற்றி பெறுவதே வீரர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    எதிவரும் ஆகஸ்ட்18ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள புஜ்ஜி பாபு கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மஹாராஷ்டிரா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரித்வி ஷா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அணியின் கேப்டனாக அங்கித் பாவ்னே நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

      Related Articles

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *

      Check Also
      Close
      Back to top button