மாணவர்களுக்காக வளிமண்டல அறிவியலை அறிமுகப்படுத்தும் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீனின் புதிய நூல்

சப்ரகமுவ மாகாண சபையின் கலாச்சார அமைச்சின் வேண்டுகோளின்பேரில், சிரேஷ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் அவர்களால் எழுதப்பட்ட “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் பிரதிகள், தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதனை முன்னிட்டு, நூலின் பிரதிகள் சமீபத்தில் சப்ரகமுவ மாகாண கலாச்சார அமைச்சின் அதிகாரி திரு. அனில் பிரியதர்சன அவர்களிடம் மொஹமட் சாலிஹீன் அவர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த நூல், மாணவர்களுக்கு வளிமண்டல அறிவியல் குறித்த அடிப்படைத் தகவல்களை எளிய முறையில் புரியவைக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. கல்வி துறைக்கு பயனுள்ள இந்த முயற்சி, மாணவர்களின் அறிவைப் பெருக்குவதற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஆண்டு 6 முதல் 13 ஆம் வகுப்பு வரை உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் வகையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக இதயப்பூர்வ பங்களிப்பாக அமைந்துள்ள இந்த நூல், எதிர்கால தலைமுறைக்கான அரிய வழிகாட்டியாக அமையும்.