சம்மாந்துறையில் மிக விமர்சயாக நடைபெற்ற எழுத்தாளர் எஸ்.எல். றியாஸ் அவர்களின் 65 நூல்களின் அறிமுக விழா மற்றும் கண்காட்சி.!
✍️மஜீட். ARM
எழுத்தாளர் எஸ்.எல். றியாஸ் அவர்களால் கடந்த 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட 65 நூல்களின் அறிமுக விழாவும், கண்காட்சியும் வெற்றிகரமாக நடைபெற்றது.
சம்மாந்துறையில் உள்ள அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 23, சனிக்கிழமை) மாலை 3:00 மணியில் இருந்து 6.30 வரை இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்தக் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு 65 நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு எழுத்தாளர் எஸ்.எல். றியாஸ் அவர்களின் படைப்புகளுக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக இணைந்ததன் மூலம் தனது எழுத்துகளால் பிரகாசித்த எஸ்.எல். றியாஸ் 1996 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் உலக கிண்ண வெற்றியை தொடர்ந்து ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மினும் இணைந்து சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள் என்ற தலைப்பில் டெஸ்ட் விளையாடும் அனைத்து கிரிக்கெட் அணிகளினதும் சாதனைகளை தொகுத்து ஒரு நூலை 2001 ஆம் வருடம் வெளியிட்டார். அதுவே அவரின் முதலாவது நூலாகும்.
இந் நிகழ்வில் மூத்த உலமா “வரலாற்றில் ஒரு ஏடு புகழ்” மௌலவி ஏ.சி.எம். புகாரி, மட்டும் கௌரவ அதீதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌசாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மட்டும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர் எழுத்தாளர் சிராஜ் மசூர் அவர்களும்மட்டும் கல்வியாளர்கள், பொதுமக்களெனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்
