Accident

ஆண்டு இறுதியில் சோகம்: ஐந்து உயிர்களை பலியெடுத்த வீதி விபத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குருநாகல் – புத்தளம் வீதியின் ஹிரிகொல்ல பகுதியில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளியும் மோதியதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த இவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், நிலாவெளி – தெஹிவத்தை வீதியின் மூதூர் – குங்குவெளி சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.அவருடன் பயணித்த ஏனைய இருவர் பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பங்கதெனிய – ஆணமடுவ வீதியின் குமாரகட்டுவ பகுதியில் உந்துருளி ஒன்றும் உழவு வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்

மேலும், கொழும்பு – பியகம வீதியின் பட்டிய சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற பாரவூர்தி மோதியதில் பின்னால் அமர்ந்து பயணித்த 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தளம் – குருநாகல் வீதியின் மல்லங்குளம் பகுதியில் உந்துருளி மீது நோயாளர் காவு வண்டி ஒன்று மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆண்டு இறுதியில் சோகம்: ஐந்து உயிர்களை பலியெடுத்த வீதி விபத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குருநாகல் – புத்தளம் வீதியின் ஹிரிகொல்ல பகுதியில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளியும் மோதியதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த இவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், நிலாவெளி – தெஹிவத்தை வீதியின் மூதூர் – குங்குவெளி சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.அவருடன் பயணித்த ஏனைய இருவர் பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பங்கதெனிய – ஆணமடுவ வீதியின் குமாரகட்டுவ பகுதியில் உந்துருளி ஒன்றும் உழவு வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்

மேலும், கொழும்பு – பியகம வீதியின் பட்டிய சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற பாரவூர்தி மோதியதில் பின்னால் அமர்ந்து பயணித்த 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தளம் – குருநாகல் வீதியின் மல்லங்குளம் பகுதியில் உந்துருளி மீது நோயாளர் காவு வண்டி ஒன்று மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button