Accident
நிறுத்தி வைத்திருந்த தனியார் பேருந்தில் தீ

யாழ்ப்பாணம், நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று (16) சற்றுமுன் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.