🔴போலிக் #Facebook கணக்கு மூலம் மிரட்டிய இளைஞர் கைது! வயம்ப பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த அச்சுறுத்தல்!

வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் நிர்வாணப் படங்களையும் காணொளிகளையும் போலியான முகநூல் கணக்கு ஒன்றின் மூலம் பகிர்ந்து மிரட்டிய 24 வயது இளைஞர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருகாகல் – மஹவ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், மாணவியின் முகநூல் கணக்கிற்கு அவரின் நிர்வாணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் அனுப்பி, தான் சொல்வது போல் செய்யவில்லை என்றால் அவற்றை சமூக ஊடகங்களில் பகிரப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் புதன்கிழமை (ஜூலை 2) குருணாகல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.