Sri Lanka News
10 நாட்களில் தீர்வு கிடைக்குமா? மலையகத்தில் மரக்கறி உற்பத்திக்கு ஆபத்து – யாருடைய தவறு?

மலையகத்தில் எதிர்வரும் காலத்தில் மரக்கறி உற்பத்தியிலிருந்து விலகப் போவதாக விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
உள்ளூர் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றை விற்பனை செய்வதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சிக்கல் நிலை எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால் மலையகத்தில் மரக்கறி உற்பத்தியைக் கைவிட உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதாலேயே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.



