Sports
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்தவுள்ளதுடன், சுப்மன் கில் துணைத் தலைவராக செயற்படவுள்ளார்.
இந்தநிலையில் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், சஞ்சு சம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படெல், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் குறித்த குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் 28 வரை அபுதாபி மற்றும் டுபாயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.