Sri Lanka News
இன்று யாழ்நகரில் ஹர்த்தால் முயற்சி தோல்வி

வடக்கு கிழக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்துக்கு எதிராகவும் முல்லைதீவு- முத்துஐயன் கட்டுபிரதேசத்தில் இராணுவத்தின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும் தமிழர் தாயகத்தில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் அரசு கட்சி சார்பாக அறிவித்தல் கொடுக்கப்பட்டது. இன்று காலை முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம் எ சுமந்திரன் அறிவித்திருந்தார்.
முல்லைத்தீவு , மன்னார் மற்றும் கிழக்கு பகுதியில் குறிப்பிட்ட சிலர் ஆதரவு வழங்கிய போதும் யாழ் நகரில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. யாழ்பாணத்தில் வழமை போன்று கடைகள் திறந்து இருப்பதை அவதானிக்க முடிகிறது.