News
தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா (16) சனிக்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ் கார்டனில் இடம்பெற்றது.
அமையத்தின் தேசிய தலைவர் அகில இலங்கை சமாதான நீதவான் கலாநிதி ஏ.எல். அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரபல சமூக செயற்பாட்டாளர் ரிசாத் ஷெரீப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய சமாதான நீதிபதி சபையினுடைய அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வில் எதிர்காலத் திட்டமிடல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, சமூக சேவைக்காக நிதியம் ஒன்றும் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
