Sri Lanka News

1000 கிலோகிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு

பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிசாரால் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருட்களாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் 1000 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று (22) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button