ஜூன் மாதத்தில் 98 இலட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் இந்தியாவில் தடை!

தவறான பயன்பாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஜூன் 2025 இல் இந்தியாவில் 9.8 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயனர் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே இந்த கணக்குகளில் கிட்டத்தட்ட 1.979 மில்லியன் கணக்குகள் தடை செய்யப்பட்டன.
தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பே தடுப்பதே தங்கள் முன்னுரிமை என்று வாட்ஸ்அப் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தது.
அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் கணக்குத் தடைகள் தொடர்பாக வாட்ஸ்அப் 16,069 தடை மேல்முறையீடுகளைப் பெற்றது, அவற்றில் 756 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தால் பெறப்பட்ட மொத்த பயனர் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 23,596, அவற்றில் 1,001 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.